WhatsApp இல் சத்தமின்றி நடக்கும் வேலை

ஆண்ட்ராய்டில் பிங்கர்பிரிண்ட் அம்சத்தினை உருட்டிய கையோடு வாட்ஸ்அப் நிறுவனம் அதன் ஐஓஎஸ் பதிப்பின் கீழ் Netflix streaming ஆதரவு சார்ந்த ஒரு அம்சத்தின் கீழ் பணியாற்றி வருகிறது.

பிரபல மெசேஜிங் தளமான வாட்ஸ்அப்பிற்குள் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் அல்லது யூட்டியூப் வீடியோக்களை மட்டுமே பார்க்க முடியும் என்பதை நாம் அறிவோம்.

ஒருவேளை நீங்கள் அமேசான் ப்ரைம் வீடியோ அல்லது நெட்ப்லிக்ஸ் போன்ற வீடியோ ஸ்ட்ரீமிங் லின்க்களை வாட்ஸ்அப் வழியாக திறக்க முயற்சித்தால், நீங்கள் அந்தந்த ஆப்ஸ் அல்லது வெப் ப்ரவுஸருக்கு நேவிகேட் செய்யப்படுவீர்கள். என்பதையும் சிலர் அறிந்திருக்கலாம்.

இந்த நிலைமை கூடிய விரைவில் மாறப்போகிறது. பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் வழியாக அமேசான் ப்ரைம் மற்றும் நெட்ப்லிக்ஸ் வீடியோக்களையும் நாம் காணப்போகிறோம். தற்போது வரையிலாக இந்த செயல்பாடு நெட்ப்லிக்ஸ் நிறுவனத்திற்காக மட்டுமே உருவாக்கப்பட்டு வருகிறது.


No comments

Powered by Blogger.