பிரதேச செயலகங்களை நிறுவுவ பிரதமர் இணக்கம்

அம்பாறை மாவட்டத்தில் நீண்டகாலத் தேவையாக இருந்து வந்த மூன்று தமிழ் பிரதேச செயலகங்களை நிறுவுவதற்கு பிரதமர் ரணில் விக்கிரசிங்க இணக்கம் தெரிவித்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.கோடிஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கோடீஸ்வரன் தலைமையிலான குழுவொன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை நேற்று கொழும்பில் சந்தித்தது. இந்த சந்திப்பின் போதே இவ்வாறு இணக்கம் காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் ஜனாதிபதி தேர்தலின் போது புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்குமாறு இதன்போது வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

அம்பாறையில் கல்முனை தமிழ் உப பிரதேச செயலகத்தை பிரதேச செயலகமாக தரமுயர்த்துமாறு பல தசாப்தங்களாக தமிழ் மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த கோரிக்கை சில மாதங்களுக்கு முன்னர்  பல்வேறு போராட்டங்களுக்கும் வழிவகை செய்தது. எனினும் இது குறித்து தீர்வு எட்டப்படாத நிலை தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.


No comments

Powered by Blogger.