காணாமல்போன பல்கலைக்கழக மாணவன் சடலமாக மீட்பு

காணாமல் போன யாழ்.பல்கலைக்கழக மாணவன் காட்டுப் பகுதியிலிருந்து சடலமாக மீட்கப்பட்டள்ளார்.

வவுனியா வடக்கு கனகராஜன்குளம்  குறிசுட்டகுளம் பகுதியைச் சேர்ந்த யாழ். பல்கலைக்கழக மாணவரான பாலசுப்பிரமணியம் தர்மிலன் (வயது-23) என்ற மாணவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த மாணவன் நேற்று காலை முதல் காணாமல் போயிருந்த  நிலையில் கனகராஜன்குளம் பொலிஸார், அப்பகுதி இளைஞர்கள் மற்றும் விஷேட அதிரடிப்படையினர் இணைந்து தேடுதலை முன்னெடுத்திருந்தனர்.

இந்த நிலையில் குறித்த மாணவன் அப்பகுதி காட்டிற்குள் மண் அகழப்பட்ட குழி ஒன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

கிரவல் வெட்டப்பட்ட கிடங்குக்குள் தண்ணீர் தேங்கிய பகுதிக்குள் வீழ்ந்து இளைஞன் உயிரிழந்திருக்கலாம் என்று பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

சடலம் நீதவானின் வருகையின் பின்னர் மருத்துவ சோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளது.

மேலதிக விசாரணைகளை  பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.No comments

Powered by Blogger.