புலிகளிடம் மீட்கப்பட்ட தங்கம் ; தகவல் வெளியிட்ட ராஜித

தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட  தங்கம் தொடர்பில் முக்கிய தகவல்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார் அமைச்சர் ராஜித சேனாரத்ன.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்ததாவது,

தேர்தலுக்காக ராஜபக்சக்கள் பாரிய செலவைச் செய்கின்றனர். எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு எவ்வாறு அப்படிச் செலவழிக்க முடியும்?

புலிகளிடமிருந்த பெருந்தொகை தங்கத்தை உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பதுக்கி வைத்துள்ளனர்.

இலங்கையில் அவை வைக்கப்பட்டுள்ள சில இடங்கள் குறித்தும் எமக்குத் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன-என்றார்.No comments

Powered by Blogger.