இன்றைய நாள் உங்களுக்கு எப்படி (06.11.2019)

மேஷம்
எதிர்கால முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சியில் வெற்றி கிட்டும் நாள். கையில் காசு பணப்புழக்கம் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக சந்திக்க நினைத்த உறவினர் ஒருவரின் திடீர் சந்திப்பு கிட்டும். 

ரிஷபம்
சொல்லைச் செயலாக்கிக் காட்டும் நாள். வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட் களை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு. பிள்ளைகளின் எதிர்கால நலன்கருதி சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.

மிதுனம்
நட்புவட்டம் விரிவடையும் நாள். பொது வாழ்வில் மதிப்பும், மரியாதையும் உயரும். தொழில் முன்னேற்றம் அதிகரிக்கும். நண்பர்கள் எடுத்த காரியத்தை முடித்துக் கொடுப்பர். அரசுவழி அனுகூலம் உண்டு.

கடகம்
யோசித்துச் செயல்பட வேண்டியநாள். குடும்பச் சுமை கூடும். அதிக விரயம் ஏற்படுகிறதே என்று அங்கலாய்ப்பீர்கள். தந்தை வழி உறவில் விரிசல் ஏற்படும். பயணங்களைத் தள்ளிவைப்பது நல்லது.

சிம்மம்
எதிர்பாராத நண்பரின் சந்திப்பால் எதிர் காலத்தைச் சீராக்கிக் கொள்ளும் நாள். ஆடை, அலங்காரப் பொருட்களை வாங்கு வதில் ஆர்வம் ஏற்படும். நண்பர்கள் உங்கள் தொழில் வளர்ச்சிக்கு உறுதுணை புரிவர்.

கன்னி
மன அமைதி கிடைக்க மால்மருகனை வழிபட வேண்டியநாள். காரியத்தை முடிக்க பெரும் பிரயாசை எடுக்க நேரிடலாம். வரவைக் காட்டிலும் செலவு கூடும். மறைமுக எதிர்ப்புகள் உருவாகலாம்.

துலாம்
பிள்ளைகளால் பெருமை சேரும் நாள். பிரபலஸ்தர்களின் சந்திப்பு கிடைக்கும். கடன் பாக்கிகளை நாசூக்காகப் பேசி வசூலிப்பீர்கள். உறவினர்களின் வருகை உண்டு. கல்யாண முயற்சி கைகூடும்.

விருச்சிகம்
நண்பர்கள் நம்பிக்கைக்கு உரிய விதம் நடந்து கொள்ளும் நாள். முக்கியப் புள்ளிகளின் ஒத்துழைப்பால் நினைத்தது நிறைவேறும். பொதுவாழ்வில் புதிய பொறுப்புகள் வந்துசேரும். 

தனுசு
குடும்ப ஒற்றுமை பலப்படும் நாள். வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்திசெய்து கொள்ள முன்வருவீர்கள். சகோதர சச்சரவு அகலும். நண்பர்களிடம் ஒப்படைத்த பொறுப்புகள் நல்லவிதமாக நடைபெறும்.

மகரம்
வருமானம் திருப்தி தரும் நாள். வாய்ப்புகள் வாயிற்கதவைத் தட்டும். உற்றார் உறவினர்களின் ஒத்துழைப்பு உண்டு. உடன்பிறப்புகள் வழியில் உள்ளம் மகிழும் சம்பவமொன்று நடைபெறலாம்.

கும்பம்
கொடுத்தவாக்கை காப்பாற்றி மகிழும் நாள். தேங்கிய காரியங்களை துரிதமாகச் செய்துமுடிப்பீர்கள். வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும். பணவிவகாரங்களில் நாணயத்தைக் காப்பாற்றுவீர்கள்.

மீனம்
வரன்கள் வாயில் தேடிவரும் நாள். வருமானம் வரும் வழியைக் கண்டு கொள்வீர்கள். சொந்த பந்தங்களின் சந்திப்புக் கிட்டும். திட்டமிட்ட பயணங்களில் திடீர் மாற்றங்களைச் செய்ய நேரிடலாம்.No comments

Powered by Blogger.