உத்தரப்பிரதேச தாக்குதல் : நால்வருக்கு மரணதண்டனை

உத்தரப்பிரதேச மாநிலம், ராம்பூர் மாவட்டத்தில் உள்ள துணை இராணுவப்படையினர் மீது கடந்த 2008 ஆம் ஆண்டு சில பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 7 வீரர்கள் உள்ளிட்ட 8 பேர் கொல்லப்பட்டனர். தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் ம்ரான் ஷாஜாத், முஹம்மது பாரூக், முஹம்மது ஷரிப், சபாவ்தீன் ஆகிய நால்வருக்கே இவ்வாறு மரணதண்டனை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


மேலும் ஜங் பஹதூருக்கு என்ற குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையும் பைம் என்பவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டதுடன், இவ்வழக்கில் தொடர்புடைய மேலும் 3 பேருக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் இல்லாததால் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக சிலரை கைது செய்த பொலிஸார் 9 பேர் மீது வழக்கு தாக்கல் செய்து விசாரணைகளை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments

Powered by Blogger.