வவுனியாவில் விபத்தைக் குறைக்க வழிசெய்யங்கள்

அண்மையில் இடம்பெற்ற சிறுமியின் மரணத்தை தொடர்ந்து இனியொரு மரணங்களும் நிகழாத வண்ணம் உரிய நடவடிக்கை எடுக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கின்றேன்-இவ்வாறு தெரிவித்துள்ளார் முன்னாள் வவுனியா நகரசபை தலைவரும், முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான ஜி.ரி.லிங்கநாதன்.

வீதி விபத்தை தவிர்க்க மாற்று நடவடிக்கையை செயற்படுத்துமாறுகோரி வவுனியா நகரசபை தலைவர் கௌதமனுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

 விடயம் தொடர்பாக எமது வவுனியா நகரப்பகுதியானது கூடுதலான மக்கள் நடமாட்டத்தைக் கொண்டதாகக் காணப்படுவதுடன் வாகன நெரிசல்களும் அதிகரித்துக் காணப்படுகின்றது. 

அண்மையில் வவுனியா இலுப்பையடியில் ஏற்பட்ட விபத்தின் போது பரிதாபகரமான முறையில் சிறுமி ஒருவரின் உயிர்மாய்க்கப்பட்டது. 

தற்போது ஏற்படுகின்ற வாகன,வீதி விபத்துக்களை தவிர்க்கும் நோக்கில் தங்களது நிர்வாகம் வவுனியா பொலிஸ் திணைக்களத்துடன் இணைந்து மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ள கீழ்வரும் விடயங்களையும் முன்னிலைப்படுத்துமாறு கேட்டு கொள்கின்றேன்.

ஹொரவபொத்தான வீதியில்  வவுனியா பொது மருத்துவமனைப் பகுதியிலிருந்து சூசைப்பிள்ளையார்குளம் வரையான வீதியின் இருமருங்கிலும் வாகனங்களை நிறுத்த தடைசெய்தல்.

பாடசாலைகள் ஆரம்பித்து, முடிவடையும் நேரப்பகுதியில் கனரக வாகனங்கள் பயணிப்பதை தடைசெய்தல், குருமன்காடு- தாண்டிக்குளம் வீதியில் கனரக வாகனப் போக்குவரத்தைத் தடைசெய்தல்‌ ஒரு குறிப்பிட்ட நேரத்தில் வேறு வீதியின் ஊடாக கனரக வாகனங்கள் பயணிப்பதற்கு ஒழுங்கு செய்தல்.

போன்ற விடயங்கனை கருத்தில் கொண்டு வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருடன் தொடர்பு கொண்டு அண்மையில் இடம்பெற்ற சிறுமியின் மரணத்தை தொடர்ந்து இனியொரு மரணங்களும் நிகழாத வண்ணம் உரிய நடவடிக்கை எடுக்குமாறு தங்களை அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன். என்று அதில் உள்ளது.
                            
குறித்த கடிதத்தின் பிரதிகள் வவுனியா மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர், ​வவுனியா உள்ளுராட்சி உதவி ஆணையாளர், மாகாண உள்ளூராட்சி திணைக்களம், நகரசபை செயலாளர் ஆகியோருக்கும் கடிதம்  அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


No comments

Powered by Blogger.