யாழ் விஐயம் செய்துள்ள பிரதமர்

யாழ்ப்பாணத்திற்கு விஐயம் செய்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க நேற்று  காலை
யாழ் நாகவிரையில் வழிபாடுகளை மேற்கொண்டுள்ளார். 

ஐனாதிபதி தேர்தல் பிரச்சாரப் பணிகளுக்காக வடக்கிற்கும் விஐயம் செய்துள்ள பிரதமர் தலைமையிலான குழுவினர் யாழில் தங்கியிருந்து பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இதற்கமைய நேற்றயமுன்தினம்  யாழ் விஐயம் செய்த பிரதமர் யாழ் நகரிலுள்ள நாகவிகாரைக்கு சென்று விசேட வழிபாடுகளில் ஈடுபட்டார். இதன் போது நாகவிகாரையின் விகாராதிபதியையும் சந்தித்து கலந்துரையாடினார்.

இந்த வழிபாட்டில் அமைச்சர்களான ரவி கருணாநாயக்க, ராஜித சேனரத்தின உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து பல்வேறு கூட்டங்களில் கலந்து கொள்ளவுள்ளதுடன் பல தரப்புனர்களையும் சந்தித்து கலந்துரையாடல்களையும் பிரதமர் தலைமையிலான குழுவினர் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments

Powered by Blogger.