மக்கள் தலைவர் என்று எழுத வேண்டும் - சஜித்

அரசியலில் நிரந்தர எதிரியாகவோ  நிரந்தர நண்பராகவோ எவரும் இல்லை. அந்த வகையில் தான் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க -எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச இருவரும் இப்போது நண்பர்கள் என்பதே உண்மை. என்கிறார் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச. 

என்னுடன் யார் கைகோர்த்தாலும் எனது அரசாங்கத்தில் குற்றவாளிகளுக்கு இடமில்லை என தனது  பிரத்தியேக செவ்வியில் இந்த கருத்துக்களை அவர் முன்வைத்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

இலங்கையின் எதிர்கால வரலாற்றில் இலங்கையில் மக்களுக்காக செயற்பட்ட இரவு பகல் பார்க்காது சேவை செய்த மக்கள் தலைவர் ஒருவராக சஜித் பிரேமதாச இருந்தார். என்று எழுத வேண்டும். அதற்காக நான் மக்களுக்காக சேவை செய்ய விரும்புவதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.


No comments

Powered by Blogger.