மக்களுக்கு எச்சரிக்கை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பல இடங்களில்  மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னரே இந்த நிலமை காணப்படும்

வடக்கு-கிழக்கு மாகாணங்களில் காலை வேளையிலும் சிறிதளவான மழை கரையோரப் பிரதேசங்களில் பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ, மத்திய, தென், ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில் 50-75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

குறித்த மாகாணங்களின் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலையும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் மின்னல் தாக்கங்களினாலும் பலத்த காற்றினாலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவத்துள்ளது.


No comments

Powered by Blogger.