தபால் மூல வாக்களிப்பில் பொலிஸார்

வவுனியாவிலும் ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்றையதினம் இடம்பெற்று வருகிறது.

வவுனியாவின் நான்கு பிரதேச செயலகங்கள், மற்றும் ஏனைய அரச திணைக்களங்கள், உள்ளூராட்சி மன்றங்கள் போன்றவற்றில் வாக்களிப்பிற்கான பிரத்தியேக நிலையங்கள் அமைக்கபட்டிருந்தது. 

அங்கு அரச ஊழியர்கள் தமது அஞ்சல் வாக்கினை கடந்த 31 ஆம் திகதி காலை முதல் செலுத்தியிருந்தனர்.

இந்த நிலையில் இன்றையதினம் பொலிஸாரும் தமது வாக்கைச் செலுத்தி வருகின்றனர்.

இதேவேளை வவுனியா மாவட்ட செயலக உத்தியோகத்தர்களுக்கு இன்றையதினம் தபால் வாக்களிப்பு இடம்பெற்றதுடன் வவுனியா பொலிஸ் நிலையத்திலும் வாக்களிப்பு நடவடிக்கை இடம்பெற்றது.

வவுனியா மாவட்டத்தில் 5  ஆயிரத்து, 38 பேர் அஞ்சல் வாக்காளர்களாக விண்ணப்பித்திருந்த நிலையில் 4 ஆயிரத்து140 பேரின் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டும் 750 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டும் உள்ளது. 

இதில் வெளி மாவட்டங்களுக்கு 148 வாக்குகள் அனுப்பப்பட்டுள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் எம்.கனீபா  தெரிவித்திருந்தார்.No comments

Powered by Blogger.