கோத்தபாய வென்றால் நகைகளை மீட்டுத் தருவார்

விவசாயத்தில் மக்கள் நெருக்கடியை சந்தித்து தாய்மார்கள், பெண்களின் நகைகள் அடகு வைக்கப்பட்டு பெரும் பொருளாதார நெருக்கடியில் இருகின்றனர். கோத்தபாய ராஜபக்ச ஆட்சிக்கு வந்தால் அவற்றை மீட்டு எடுக்க கூடிய விதத்தில் விவசாயத்திற்கு பல சலுகைகளை வழங்கி நகைகளை மீட்டெடுக்கும் பொற்காலமாக அமையும். இவ்வாறு தெரிவித்துள்ளார்  பசில் ராஜபக்ச.

கல்முனை-நற்பிட்டிமுனை சுமங்கலி மண்டபத்தில் இடம்பெற்ற பரப்புரைக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் தெரிவித்ததாவது,

தமிழ் தேசியக் கூட்டமைப்பு 2015 ஆம் ஆண்டு எங்களை தோற்கடித்து தமிழ் மக்களுக்கு என்ன செய்தார்கள் தங்களது பைகளை நிரப்பிக் கொண்டதை மாத்திரம் செய்தனர்.

நாங்கள் ஆட்சிக்கு வந்த பின்னர் 17 ஆம் திகதி முதல் 1 ஆம் திகதிக்குள்  ஒரு இலட்சம் இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுப்போம் இந்த அரசு படித்த இளைஞர்களுக்கு தொழில் வழங்காது புறக்கணிப்பை செய்து வருகின்றது.

இந்த ஆட்சியில் விவசாயத்தில் மக்கள் நெருக்கடியை சந்தித்து தாய்மார்கள், பெண்களின் நகைகள் அடகு வைக்கப்பட்டு பெரும் பொருளாதார நெருக்கடியில் இருகின்றனர்.

கோத்தபாய ராஜபக்ச ஆட்சிக்கு வந்து அவற்றை மீட்டு எடுக்க கூடிய விதத்தில் விவசாயத்திற்கு பல்வேறு சலுகைகளை வழங்கி நகைகளை மீட்டெடுக்கும் பொற்காலமாக அமையும்.

கோத்தபாய ராஜபக்ச ஆட்சிக்கு வந்து மூன்றே நாள்களில் கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் தரமுயர்த்தி இந்த பிரதேச மக்களின் அவலத்தை துடைத்தெறிவார் .

இந்த நாட்டில் சிறுபான்மை, பெரும்பான்மை,என்ற மரபு உடைத்தெறிந்து சகோதர இனம் என்றே பொதுஜன பெரமுன  ஆட்சியில் இருக்கும்-என்றார்.No comments

Powered by Blogger.