யாழ்ப்பாணத்திலிருந்து இன்று புறப்படுகிறது விமானம்

யாழ்ப்பாணம் - சா்வதேச விமான நிலையத்திலிருந்து சோதனை விமானசேவை  இன்றையதினம் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனை சிவில் விமானசேவைகள் அதிகாரசபை மேற் கொள்ளவுள்ளதாகக் கூறப்படுகிறது.

இரத்மலானை விமான நிலையத்தில் இன்று பயணிக்கும் விமானம் ஒன்றே யாழ்.விமான நிலையத்தில் தரையிறங்கவுள்ளது.

ஒரு மணி நேரத்தின் பின்னர் குறித்த விமானம் சென்னை விமான நிலையத்தை நோக்கிப் பயணித்து, மீண்டும் சென்னையிலிருந்து யாழ்.சர்வதேச விமான நிலையத்தை நோக்கி பயணிக்கவுள்ளதாகக் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை வர்த்தக விமானப் பயணங்கள் எதுவும் இன்றைய தினம் மேற்கொள்ளப்படாதென அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் நாளை முதல் வர்த்தக விமான பயணங்கள் ஆரம்பிக்கப்படுமெனவும் சிவில் விமான அதிகாரசபை தெரிவித்துள்ளது.No comments

Powered by Blogger.