விசுவமடு துயிலும் இல்லம் சிரமதானம் முன்னெடுப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தின் விசுவமடு மாவீரர் துயிலும் இல்ல சிரமதான  பணிகள் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது. 

கார்த்திகை  27 நடைபெறவுள்ள மாவீரர் நாள் நிகழ்வுகளை  மாவீரர் தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தின் சிரமதான பணிகளில் மக்கள், சமூகமட்ட அமைப்புக்கள் நலன் விரும்பிகள் அனைவரையும் கலந்து கொண்டு ஆதரவு தருமாறும்   ஏற்பாட்டுக்குழுவினர் அழைப்பு விடுகின்றார்கள்.

விடயம் தொடர்பில் விசுவமடு தேராவில்  மாவீரர் துயிலும் இல்லத்தின் பணிக்குழு தலைவர் அவர்கள் கருத்து தெரிவிக்கையில்,

உண்மையில் எங்கள் மாவீரச்  செல்வங்களின் மகத்தான நினைவு நாளை  உணர்வெளிச்சியுடன்  கடைப்பிடிப்பதற்கு எமது மாவீரர் துயிலும் இல்ல பணிக்குழு ஒத்துளைப்புடனும் உணர்வு பூர்வமாகவும் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.

இந்த துயிலும் இல்ல வளாகத்தில் பல பணிகள் செய்யவேண்டியுள்ளதால் இங்கிருக்கின்ற தாயக உறவுகள் மற்றும் பொது  அமைப்புக்கள் வருகைதந்து மிகுதியாக இருக்கின்ற பணிகளையும் பூர்த்தி செய்து கார்த்திகை 27ல் மாவீரர் நாளினை சிறப்பாக செய்வதற்கு ஒத்துளைப்பு வழங்குமாறு கோருகின்றேன்.

இந்த நிகழ்வை நிச்சயமாக கடைப்பிடித்தே தீருவோம் என்ற அயராத உறுதியுடன் செயற்படுகின்றோம் இது வீண்போகாது நிச்சயமாக மாவீரர்களின் நினைவுநாள் கார்த்திகை 27 நடைபெற்றே ஆகும் அதற்கான சகல ஒழுங்கு படுத்தல்களையும் செயற்பாட்டுக்குழு ஆகிய நாங்களும் இங்குள்ள தாயக உறவுகள் புலம்பெயர் உறவுகள் பொது அமைப்புக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டுக்கொண்டிருக்கின்றோம்.

வழமை போன்றே மாவீரச் செல்வங்களின் வழிபாட்டு தினமான கார்த்திகை 27 ஆம் நாள் நிச்சயமாக நடைபெறும் அனைத்து உறவுகளும் எமது தாயக விடுதலைப்போராட்டத்திற்கு தமது பிள்ளைகளை உவந்தளித்த பெற்றோர்கள் உறவினர்கள், தவறாது சமூகம்கொடுத்து உங்கள் பிள்ளைகளின் தீபங்களை ஏற்றி வணக்கம் செலுத்த வருமாறு அனைத்து உறவுகளையும் அன்பாக வேண்டி நிக்கின்றோம் - என்றார்.
No comments

Powered by Blogger.