மருத்துவர் வீட்டுக்கு தீ வைப்பு ; யாழ்ப்பாணத்தில் சம்பவம்

மருத்துவர் ஒருவரின் வீட்டுக்கு இனம்தெரியாத சிலர் தீ வைத்துள்ளனர்.

இந்தச் சம்பவம் நேற்று இரவு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.

இதனையடுத்து, தீ உடனடியாக பொதுமக்களின் உதவியுடன் அணைக்கப்பட்டுள்ளது.

யாரால் தீ வைக்கப்பட்டது எதற்காக வைக்கப்பட்டது என்பது தொடர்பான விவரங்கள் இதுவரை கண்டறியப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை துரிதப்படுத்தியுள்ளனர்.

மருத்துவரின் குடும்பம் மயிரிழையில் உயிர் தப்பியதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.


No comments

Powered by Blogger.