வெள்ளைவான் விவகாரம் ; வெளியான திடுக்கிடும் தகவல்கள்

இலங்கை அரசியலில்  வெள்ளைவான் கடத்தல் பற்றிய திடுக்கிடும் பல தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

வெள்ளைவானில் கடத்தப்பட்ட சாட்சி ஒருவரும் வெள்ளைவானின் சாரதி ஒருவரும் விடயம் குறித்து தமது சாட்சியங்களை பதிவுசெய்துள்ளனர்.
  
வெள்ளைவானில் ஒருவ நபரை நாங்கள் கடத்தி சென்றால் ஒருவாகனத்தில் தூக்கி அடுத்த வாகனத்தில் கொண்டுபோவோம்.

 கோத்தபாய ராஜபக்ச ஐயா வெள்ளைவான் குறித்து தெரியவே தெரியாது என்று தேர்தல் பிரச்சார மேடைகளில் கூறுகின்றார். எனினும் அவர்தான் இதன் சூத்திரதாரி்.

இவர்களில் பிரிகேடியர் ஒருவரும் மேஜர் ஒருவரும் இருக்கின்றனர். அவர்களின் கீழ் தான் இது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

மொனராகலையில் ஒரு இடம் இருந்தது. தூக்குபவர்களை அங்குதான் கொண்டுபோவோம்.  

கொண்டு செல்பவா்களின் கண்கள் கட்டப்பட்டிருக்கும். அவா்களிடம்  விசாரணை நடத்தும் போது சில சித்திரவதைகளை செய்ய நேரிடும்.

நகங்களை பிடுங்கநேரிடும். பற்களை பிடுங்க நேரிடும். விரல்களை வெட்ட நேரிடும். கூரிய ஆயுதங்களால் குத்த நேரிடும். இதுபோன்ற சிலவற்றை செய்து  கோப்பு ஒன்றை தயாரித்து  மேலிடத்திற்கு அனுப்புவொம்.

மேலிடத்தில் இருந்து  உத்தரவு வரும். வேலையை முடிக்க சொல்வார்கள்.வேலையை முடித்து விடுவது என்பது கொன்றுவிடுவது.

கொன்ற பின்னர் உடலை யாரும் கண்டெடுக்க கூடாது என மொனராகலை பிரதேசத்தில் முதலைகள் அதிகம் இருக்கும்  வாவிவியில் கொண்டுபோய் கொட்டப்படும். 

கொண்டுசெல்ல முன்னர் முதலில் உடலை வெட்டுவார்கள். உடலுக்குள் உள்ளவை அகற்றப்படும். இதன் பின்னரே வாவிவயில் கொண்டுபோய் போடப்படும்.

குறித்த வாவியில் நுநூற்றுக்கணக்கான முதலகைள் இருக்கின்றன. போட்டவுடன் முடிந்துவிடும். ஆனால் அங்கு சில சமயங்களில்  வாவியில ஆய்வு நடத்தினால் நூற்றுக்கணக்கான எலும்புகள் கிடைக்க கூடும். மண்டை ஓடுகளும் கிடைக்ககூடும். 

இது குறித்து விசாரணை நடத்தினால் இதற்கு புரண ஒத்துழைப்ப வழங்க நான் தயாராக இருக்கின்றேன் - என்றார்.


No comments

Powered by Blogger.