நாடாளுமன்ற உறுப்பினர் நினைவு தினம் அனுஷ்டிப்பு

வவுனியா முன்னாள்  நாடாளுமன்ற உறுப்பினர் தாமோதரம்பிள்ளை சிவசிதம்பரத்தின் நினைவு தினம் இன்று காலை இடம்பெற்றது.

வவுனியா வைரப்புளியங்குளத்தில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத்தூபியில்  நிகழ்வு நடைபெற்றது.

அன்னாரின் திருவுருவச் சிலைக்கு மாலையிட்டு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

வவுனியா மாவட்ட மூத்த சட்டத்தரணி, அமரர் சிவசிதம்பரத்தின் திருவுருவச் சிலையை நிறுவியவருமான  முருகேசு சிற்றம்பலம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன், வவுனியா வடக்கு பிரதேச சபைத்  தவிசாளர் எஸ்.தணிகாசலம் , நகரசபை உறுப்பினர்கள், தமிழ்மணி அகளங்கன், சமூக சேவையாளர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் , பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.No comments

Powered by Blogger.