தேர்தல் பிரச்சார பணிகள் நிறைவு

தேர்தல் பிரச்சார பணிகள் எதிர்வரும் 13 ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடைய உள்ளது. அன்று முதல் எதிர்வரும் 16 ஆம் திகதி வரையான காலப்பகுதி தேர்தல் பிரச்சாரங்கள் அற்ற  அமைதியான காலப்பகுதி என தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

குறித்த காலப்பகுதியில் எந்தவொரு தேர்தல் பிரச்சாரத்தையும் மேற்கொள்வதற்கு தடைவிதிக்க பட்டுள்ளது.
ஜனாதிபதி வேட்பாளர்களை அசௌகரியதிற்கு உள்ளாக்கும் வெறுப்புணர்வை தூண்டுதல் மற்றும் உண்மைக்கு புறம்பான தகவல்களை சமூகமயப்படுத்துவது என்பன தண்டனைக்குரிய குற்றமாகும்.

இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்கள் மூலமாக எவ்வித பிரச்சாரங்களும் எதிர்வரும் 13 ஆம் திகதி நள்ளிரவு முதல் மேற்கொள்வது தடை செய்யப்பட்டுள்ளது.


No comments

Powered by Blogger.