மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெற முடியாது-மகிந்த

மக்களுக்கு பொய் கூறி, ஏமாற்றி வாக்குகளைப் பெற முடியாது-இவ்வாறு தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச.

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுக்கூட்டமொன்று ஹசலக நகரில் நேற்று இடம்பெற்றது. 

இதில் அங்கவீனர்கள் தொடர்பிலான சர்வதேச கொள்கையை நடைமுறைப்படுத்துவதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின்  வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஸ, இதன்போது வாக்குறுதியளித்தார்.

இது தொடர்பில் மகிந்த ராஜபக்ச தெரிவித்ததாவது,

இந்த கொள்கை பிரகடனத்தில் சிங்களத்தில் ”ஏகிய” எனவும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ”எக்சத்” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. சமஷ்டி முறை தொடர்பில் பேசுகின்றனர். 

சமஷ்டி தொடர்பில் பேசி இருதரப்பு மக்களையும் ஏமாற்றும் அரசமைப்பை கடந்த காலத்தில் ரணில் விக்ரமசிங்க நிராகரித்தார். நான் தயாரித்தவொன்று அல்ல. அவர் நிராகரித்தார். 

நாடாளுமன்ற குழு தயாரித்த அறிக்கையில் அந்த கருத்து தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. சுமந்திரனின் கருத்தும் உள்ளடக்கப்பட்ட அறிக்கையும் முன்வைக்கப்பட்டது. ஆங்கிலம் மற்றும் தமிழ் உரை உள்ளடக்கப்பட்டிருந்தது. 

அதனால் சஜித் பிரேமதாசவின் இரட்டை செயற்பாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது என வட மாகாண முன்னாள் முதலமைச்சர் அறிக்கையொன்றின் ஊடாக குறிப்பிட்டுள்ளார். தமிழ் மக்களை ஒருபுறம் ஏமாற்றுகின்றார்கள். சிங்கள மக்களுக்கு அதனை மறைக்கின்றனர். 

தமிழ் மக்களுக்கு தமிழ் மொழியில் வெறோன்றைக் கூறி மோசடி செய்கின்றனர். மக்களுக்கு பொய் கூறி, ஏமாற்றி வாக்குகளைப் பெற முடியாது-என்றார்.


No comments

Powered by Blogger.