ரோஜாக்களால் கூடு கட்டிய புறா

ரோஜாக்களை கொண்டு, புறா ஒன்று கூடு கட்டியிருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியாவின் கான்பெர்ரா நகரிலுள்ள போர் வீரர்கள் நினைவிடத்தில் ரோஜாக்களை வைத்து மரியாதை செலுத்துவது வழக்கம்.

இதைக் கண்ட புறா ஒன்று, அந்த ரோஜாக்களை ஒவ்வொன்றாக வாயில் எடுத்துச் சென்று, நினைவிட மேற்பகுதியில்  அழகான கூடு ஒன்றைக் கட்டியுள்ளது.

புறாவின் இச் செயலைக் கண்ட நபர் ஒருவர், அதை புகைப்படமாக எடுத்து வெளியிட்டுள்ளார். 

முதலாம் உலகபோர் நிறைவை குறிக்கும் தினம், ஆஸ்திரேலியாவில் 11 ஆம் திகதி அனுசரிக்கப்படவுள்ளது.

இந்த நிலையில், போர் வீரர்கள் நினைவிடத்தில் ரோஜா மலர்களைக் கொண்டு புறா கூடு கட்டியுள்ளது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.


No comments

Powered by Blogger.