கால்கள் வெட்டப்பட்ட நிலையில் கழுதை மீட்பு

மன்னார், மாந்தைப் பகுதியில் கால்கள்  வெட்டப்பட்ட நிலையில் கழுதை ஒன்றின் உடல் இன்று காலை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

அப்பகுதியூடாகப் பயணித்த மக்கள் வழங்கிய தகவலையடுத்து, இன்று காலை குறித்த பகுதிக்குச் சென்று பார்வையிட்டதாக மன்னார் நகர சபை உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். அவர் தெரிவிக்கையில்,

இதன் போது கழுதையின் நான்கு கால்களும் முழுமையாக வெட்டப்பட்டுள்ளது.

குறித்த கழுதை மாட்டு இறைச்சியுடன் கலந்து விற்பனை செய்வதற்காக வெட்டப்பட்டிருக்கலாம் என மக்கள் சந்தேகம் கொண்டுள்ளனர்.

விடயம் தொடர்பாக மன்னார் சுகாதார மருத்துவ அதிகாரி   எஸ்.எம். கில்றோய் மற்றும் பொது சுகாதாரப் பரிசோதகர்களின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளேன். -என்றார்.


No comments

Powered by Blogger.