செல்ல கதிர்காம படுகொலை ; அதிர்ச்சி தகவல்கள்

செல்ல கதிர்காமம், போகஹா சந்தியில் இடம்பெற்ற மனித படுகொலைகள் தொடர்பான பல்வேறு தகவல்கள் பொலிஸாருக்கு கிடைத்துள்ளன.

இதற்கமைய இருவரை கூரிய ஆயுதம் ஒன்றில் குத்தியும் ஒருவரை துப்பாக்கியால் சுட்டும் கொலைச் செய்தவர் செல்ல கதிர்மாமத்தை சேர்ந்த 26 வயதான ஒருவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும் அதேபகுதியில் வசிக்கும் 42 வயதான ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிழந்தவர்களின் சடலங்கள் கதிர்காமம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் காயமடைந்தவர் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

சம்பவம் இடம்பெற்றமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

எவ்வாறாயினும் கொலைக்கு காரணமானவர்கள் என சந்தேகிக்கப்படும் சிலர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

கதிர்காமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


No comments

Powered by Blogger.