வாட்ஸ்ஆப்பில் புதிய தீம்

ஆண்ட்ராய்டு பீட்டா உபயோகிப்பவர்களை கவரும் விதமாக கறுத்த பின்னனி மற்றும் கறுத்த ஸ்ப்ளாஷ் திரைகளுக்கான தயாரிப்பில் இறங்கியுள்ளது வாட்ஸ்ஆப்

"கறுத்த பின்னனி" தற்போது ஹைக், டெலிகிராம் போன்ற பல ஆப்களில் உள்ளதை தொடர்ந்து, பெரும்பாலானோர் பயன்படுத்தும் வாட்ஸ்ஆப்பிலும் இத்தகைய பின்னனி வேண்டும். என்று பலரும் விடுத்த கோரிக்கை வந்த நிலையில், பயனாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக அதன் தயாரிப்பில் இறங்கியுள்ளனர் வாட்ஸ் ஆப் நிறுவனத்தினர்.

வாட்ஸ்ஆப்பின் புதிய ஆண்ட்ராய்டு 2.19.311 பீட்டா அப்டேட்டில், பளிச்சென்ற திரை தோற்றத்திற்காகவும், லாக் ஐகானிற்காகவும் பெருமளவு உழைத்ததை தொடர்ந்து, தற்போது, கறுத்த ஸ்ப்ளாஷ் திரைகளுக்கான தயாரிப்பிலும் ஈடுபட்டுள்ளது.  இந்த ஸ்ப்ளாஷ் திரையின் மூலம் பயனாளர்கள், ஒவ்வொரு முறை வாட்ஸ்ஆப் ஒபன் செய்யும் போதும், அதன் லோகோவை காண இயலும். 

மேலும், தற்போது தயாரிக்கப்படும் கறுப்பு பின்னனி, திரையை முழுவதுமாக கறுப்பாக்குவதுடன், பயனாளர்களின் மொபைல் போன் பேட்டரியே தக்க வைத்து, கண்களுக்கு அதிக அழுத்தை தருவதை தடுக்கும் என்று தயாரிப்பாளர்கள் கூறியுள்ளனர்.


No comments

Powered by Blogger.