பிள்ளைகளைத் தேடிய தந்தையர்கள் உயிரிழப்பு

காணமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளைத் தேடி தொடர் போராட்டத்தில்  ஈடுபட்டுவந்த தந்தையர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.

முள்ளியவளை, நாவற்காடுப் பகுதியைச் சேர்ந்த இரண்டு மாவீரர்களின் தந்தையான வெள்ளையன் அழகன் (வயது - 69) என்பவர் நேற்று முன்தினம்  உயிரிழந்துள்ளார்.

அவரது மகளான அழகன் கலைச்செல்வி முள்ளிவாய்க்காலில், படையினரின் கட்டுப்பாட்டில் வைத்துக் காணாமல் ஆக்கப்பட்டார்.  மகளைத் தேடி போராடி வந்த நிலையில் நோயினால் பீடிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை நேற்று 3 ஆம் வட்டாரம், முள்ளியவளை பகுதியைச் சேர்ந்த, ஒரு மாவீரரின் தந்தையான பரமசாமி-சிறீஸ்கந்தராசா என்பவர் மாரடைப்புக் காரணமாக உயிரிழந்துள்ளார்.

இவரது மகனான, சிறீஸந்தராசா - யுகேன் என்பவர் இராணுவச் சோதனைச் சாவடியில் வைத்துக் காணாமல் ஆக்கப்பட்டிருந்தார்.

இதேவேளை, கடந்த இரண்டு வருடங்களாக இடம்பெற்றுவரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது போராட்டத்தில், இதுவரை 55 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments

Powered by Blogger.