வெளிநாடுகளிலிருந்து வெங்காயம் இறக்குமதி

வெங்காயத்தின் விலை அதிகரித்துச் செல்வதால் வெங்காயத்தை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட வெங்காய விளைச்சலால்   விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் துபாய், எகிப்து, துருக்கி, ஈரான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

எதிர்வரும் 30 ஆம் திகதி வரை வெளிநாடுகளிலிருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்வதற்கான கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டுள்ளன.

துபாயிலிருந்து 2 ஆயிரம் தொன் வெங்காயம் இறக்குமதி செய்ய டெண்டரை வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

தலைநகர் டெல்லியில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.100-க்கு மேல் விற்றது. பல மாநிலங்களில் ரூ.80 முதல் ரூ.100 வரை விற்பனை ஆகிறது.

வெங்காயத்தை பதுக்கும் வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

வெங்காயங்களை ஏற்றிய முதல் கப்பல் வரும் 15 ஆம் திகதி வர வாய்ப்புள்ளதாக நுகர்வோர் விவகாரங்கள் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.