கஞ்சாவுடன் வவுனியாவில் பெண் கைது

வவுனியாவில் நேற்று இரவு பெண்ணொருவர் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.   

நொச்சிமோட்டை பாலத்தடியில் வைத்து  ஓமந்தைப் பொலிஸாரால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.
  
குறித்த பெண் தாண்டிக்குளத்திலிருந்து கள்ளிக்குளத்திலுள்ள தனது வீட்டிற்கு  மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது வழிமறித்த பொலிஸார் சோதனை மேற்கொண்டனர்.

இதன்போதே,  500 கிராம் கேரளா கஞ்சாவை  பொலிஸார் மீட்டதுடன்குறித்த பெண்ணையும் கைது செய்தனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


No comments

Powered by Blogger.