தீவிர பாதுகாப்புக்கு மத்தியில் பிரச்சாரம்

ஜனாதிபதி  வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து தமிழ்த் தேசியக்கூட்டமைப்பினர் நாடத்தும்  தேர்தல் பரப்புரை கூட்டம்  பொலிஸாரின் தீவிர பாதுகாப்புக்கு மத்தியில் முல்லைத்தீவு - மாங்குளத்தில்  நடைபெற்றது.

மாங்குளம் பொதுச்சந்தை வளாகத்தில் இடம்பெற்ற இப்பரப்புரைக்கூட்டம் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராசாவின் ஒழுங்கமைப்பில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்  மற்றும் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், இலங்கை  தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவைசேனாதிராசா மற்றும், தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், புளொட் அமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த நிலையில் இந்த கூட்டத்துக்கு தீவிர பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. கூட்டத்துக்கு வருகைதரும் மக்கள் அனைவரும் உடல் சோதனையின் பின்னரே கூட்டத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.No comments

Powered by Blogger.