​வெளிநாட்டு சிகரட்களுடன் இருவர் கைது

ஒரு தொகை ​வெளிநாட்டு சிகரட்களை டுபாயில் இருந்து சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வந்த பெண் ஒருவர் உட்பட இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

வேவல்தெனிய மற்றும் கம்பளை பகுதியை சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்கள் இன்று (05) அதிகாலை டுபாயில் இருந்து இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபர்களின் பயணப் பொதியில் இருந்து 279 பெட்டிகளில் அடைக்கப்பட்ட சிகரட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், அவற்றின் பெறுமதி 41 இலட்சம் ரூபாய்க்கு அதிகமான பெறுமதி என சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


No comments

Powered by Blogger.