கல்முனையில் கோத்தபாயாக்கு ஆதரவாக பிரசாரம்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சார்பில்  ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும்  முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கு ஆதரவு தெரிவித்து அம்பாறை மாவட்டம்   கல்முனை பகுதியில்  பரவலாக  பிரசார நடவடிக்கைகள் இன்று முன்னெடுக்கப்பட்டவுள்ளன.

தாமரை மொட்டு  இலச்சினையுடன்  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச , முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ச ,பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச ஆகியோரது புகைப்படங்களுடன் கூடிய துண்டுப்பிரசுரங்கள் யாவும் மட்டக்களப்பு மாவட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இளைஞர் அமைப்பின் தலைவர் ரி.ஹரிபிரதாப் தலைமையில்  கல்முனை நகர பகுதி எங்கும் பொதுமக்களிடம் இத்துண்டுப்பிரசுரங்களை காலை தரவைப்பிள்ளையார் கோயிலில் காலை ஆராதனையுடன்  குறிப்பிட்ட சில பகுதியில் அம்பாறை மாவட்ட அக்கட்சியின்  ஆதரவாளர் நிமால்   ஆரம்பித்து வழங்கப்பட்டுள்ளது.

   
எதிர்வரும்  ஜனாதிபதி தேர்தலை முன்னிறுத்தி மக்கள் மத்தியில் விழிப்பூட்டல் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது.தற்போது ஜனாதிபதி தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில் இப்பிரசாரம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.