சஜித்துக்கு ஆதரவாக மாங்குளத்தில் பரப்புரை கூட்டம்

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச அவர்களுக்கு ஆதரவு வேண்டி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாபெரும் தேர்தல் பரப்புரைக் கூட்டம் இன்று மாலை மாங்குளம் பொதுச் சந்தை வளாகத்தில் இடம்பெற்றது.

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா அவர்களுடைய ஏற்பாட்டில் இடம்பெற்ற கூட்டத்தில்  ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள்  கலந்துகொண்டிருந்தனர்.

குறித்த  கூட்டத்தில் இரா சம்பந்தன் மற்றும் திரு எம் ஏ சுமந்திரன்,  தர்மலிங்கம் ,சித்தார்த்தன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் ,பிரதேச சபை உறுப்பினர்கள் , கட்சியினுடைய ஆதரவாளர்கள் ,உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் கலந்துகொண்டு சஜித் பிரேமதாசவை ஆதரிக்கின்ற  கருத்துரைகளை வழங்கினர்.


No comments

Powered by Blogger.