வன்முறைகளை உருவாக்கியவர் கோத்தபாய ; ஆதாரம் காட்டும் சந்திரிக்கா

 முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகளை கோத்தபாய ராஜபக்சவே உருவாக்கினார். அதற்கான அனைத்து ஆதாரங்களும் என்னிடம் இருக்கின்றன-இவ்வாறு தெரிவித்துள்ளார் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க.

தனியார் ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்ததாவது,

சிறுபான்மை மக்களைப் பாதுகாப்பதாக கூறிவரும் ராஜபக்ச தரப்பினர் அதற்காக எவ்வாறான திட்டத்தை வைத்துள்ளார்கள் என்பது குறித்து விளக்கமளிக்க வேண்டும். 

அவர்கள் சிங்கள ராவய, பொதுபல சேனா போன்ற அமைப்புக்களை தடை செய்வார்களா..? ஏனைய இன, மதத்தினருக்கு எதிராக ஒரு விரலையேனும் உயர்த்தினால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து அவர்கள் கைது செய்யப்படுவார்களா?

அல்லது அவர்களுக்கு அலுவலகங்களை திறந்து வைத்து பணம் கொடுத்து அரவணைத்துக் கொள்வார்களா? சிறுபான்மை மக்களுக்கு எவ்வாறான நன்மைகளை செய்யப்போகிறார்கள்..?

ராஜபக்ச தரப்பினரால் வளர்த்தெடுக்கப்பட்டவர்களே முஸ்லிம் மக்களின் சொத்துக்களை எரித்து அவர்களின் மீது தாக்குதல் நடத்தினார்கள் என்பது தான் உண்மை

கடந்த 2013 ஆம் ஆண்டு முதன் முதலில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகளை கோத்தபாய ராஜபக்சவே உருவாக்கினார். 

அதற்கான அனைத்து ஆதாரங்களும் என்னிடம் இருக்கின்றன என்றார்.


No comments

Powered by Blogger.