சர்வதேசத்திற்கு தலை வணங்கா ஜனாதிபதியை தெரிவு செய்யுங்கள்

சர்வதேசத்திற்கு தலைவணங்காத ஒரு ஜனாதிபதியை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மக்கள் தெரிவு செய்ய வேண்டும் - இவ்வாறு தெரிவித்துள்ளார். எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கண்டி நகரில் நேற்றைய தினம் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார் அவர் தெரிவித்ததாவது,

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் தந்தை ரணசிங்க பிரேமதாஸ காலத்தில் 67 ஆயிரம்  இளைஞர் யுவதிகள் படுகொலை செய்யப்பட்டனர்.  மீண்டும் பிரேமதாஸ யுகத்திற்கு இடமளிக்கக்கூடாது.

 இந்த நாட்டு ஜனாதிபதி தேர்தலானது, சர்வதேசத்திற்கு எப்போதும் அடிபணியாத ஒரு தலைவரையே மக்கள் தெரிவுசெய்வதற்கான சந்தர்ப்பமாக மாற்றிக்கொள்ள வேண்டுமே தவிர, ஜனாதிபதி மாளிகையில் அடிமையாக செயல்படும் ஒருவரை தெரிவு செய்யக்கூடாது. 

தந்தையின் வழியில் செல்வதாக சஜித் அடிக்கடி கூறுகின்றார். பேராதனை பாலத்திற்கு கீழ் எத்தனை  பேரை பிரேமதாஸ யுகத்தில் கொன்று குவித்தார்கள். 

பேராதனை பல்கலைக்கழகத்தில் 22 மருத்துவப்பீட மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். 

மாவத்தையில் 157 பேர் படுகொலை செய்யப்பட்டதோடு, அவர்களில் 27 பேர் வரை ஜே.வி.பி கொலை செய்தது. கடுகண்ணாவ, ரன்தெனிகல, அஸ்கிரிய பொலிஸ் காவலரன், குண்டசாலை, கட்டுகஸ்தோட்டை, அங்கும்புற, சிஸ்வஸ்டர் கல்லூரி அருகே நடத்திவந்த பிரேமதாஸவின் சித்திரவதை முகாம்கள் நினைவிருக்கிறதா? 

இன்றுள்ள இளைஞர்களுக்கு அது நினைவிலிருக்காது. ஆகவே மீண்டும் அந்த யுகத்திற்கு இடமளிக்கக்கூடாது - என்றார்.


No comments

Powered by Blogger.