காற்று மாசு பற்றி பேசிய பிரபல நடிகை வறுத்தெடுத்த ரசிகர்கள்

பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா காற்று மாசு பற்றி பேசியதற்கு, புகை பிடிக்கும் நீங்கள் அதைப்பற்றி பேசக்கூடாது என்று ரசிகர்கள் கூறியுள்ளார்கள்.

புதுடெல்லியில் கடந்த மூன்று ஆண்டுகளை விடவும் அதிகமாக காற்று மாசு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.  கட்டுமான பணிகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து காற்று மாசை குறைக்கும் நடவடிக்கையில் அரசு இறங்கியுள்ளது.

டெல்லியில் அதிகரித்திருக்கும் காற்று மாசு குறித்து நடிகை பிரியங்கா சோப்ரா முகமூடியுடன் செல்பி ஒன்றை பகிர்ந்து, காற்று மாசால் படப்பிடிப்பு நடத்துவது கடினமாக உள்ளது. இதுபோன்ற நிலைமையில் இங்கு எப்படி வாழ்வது என்று நினைத்து கூட பார்க்க முடியவில்லை.

நாம் காற்று சுத்திகரிப்பு மற்றும் முகமூடிகளால் ஆசீர்வதிக்கப்பட்டு இருக்கிறோம். வீடு இல்லாதவர்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள். எல்லோரும் பாதுகாப்பாக இருங்கள் என அறிவுரை கூறியிருந்தார்.

இதனை பார்த்த ரசிகர்கள் புகை பிடிக்கும் உங்கள் வாய்க்கு முகமூடி போட்டது சரிதான்.  காற்று மாசு குறித்து உங்களை போன்ற இரட்டை நிலைப்பாடு உடையோர் பேசக்கூடாது . காற்று மாசை பற்றி பேசுவதற்கு முன்பு புகைப்பிடிக்கும் பழக்கத்தை விடுங்கள். என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.

சமீபத்தில் பிரியங்கா சோப்ரா  குடும்பத்துடன் உட்காந்து புகைப்பிடித்த போட்டோக்கள் வைரலானது. அப்போதே அவர்மீது விமர்சனங்கள் பாய்ந்தன.   No comments

Powered by Blogger.