சுற்றுலாத் துறையின் அதீத வளர்ச்சி

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்படுமென சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கமைய இந்த வருடத்தின் இறுதி இரண்டு மாத கால பகுதியில் 4 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை தருவர் என எதிர்பார்க்கப்படுவதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

ஏற்கனவே 15 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாகவும் இதற்கமைய, சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 2 மில்லியனை விடவும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சுற்றுலாத்துறை மூலம் 2019ஆம் ஆண்டில் 4 பில்லியன் அமெரிக்க டொலர் வருவாய் கிடைக்கும் என சுற்றுலாத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் இலங்கையில் இடம்பெற்ற தாக்குதலையடுத்து சுற்றுலாத்துறை வீழ்ச்சியடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.No comments

Powered by Blogger.