முடியை துண்டித்து பெண்மேயரை இழுத்துச்சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள்

பொலிவியாவில்  பெண்மேயரின் தலைமுடியை கத்தரித்து அவரது உடலில் வர்ணம்பூசி வீதியால் ஆர்ப்பாட்டக்காரர்கள் இழுத்துச் சென்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பொலிவியாவில்  இடம்பெற்ற தேர்தலின் பின்னர் அந்த நாட்டில் மோசமான வன்முறை மூண்டுள்ள நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அரசாங்கத்திற்கு எதிராக போராடி வரும் ஆர்ப்பாட்டக்காரர்கள் வின்டோ நகரில் பாலமொன்றை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டவேளை அவர்களின் இரு ஆதரவாளர்கள் அரச தரப்பினரால் கொல்லப்பட்டுள்ளனர் என வதந்திபரவியுள்ளது.

இதனை தொடர்ந்து வின்டோ நகரில் மாநாகரசபையின் தலைமை அலுவலகத்திற்குள் நுழைந்த  கும்பலொன்று மேயர் அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்படுகின்றார். என பட்ரீசியா ஆர்சினை வீதியில் இழுத்துச்சென்று பாலத்தில் நிற்கவைத்துதலைமுடியை துண்டித்துள்ளனர். அத்துடன் நாகரசபையின் தலைமை அலுவலகத்தை தீயிட்டுக்கொழுத்தியுள்ளது  என அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர்.

மேயர்தலைமுடி துண்டிக்கப்பட்ட உடல் முழுவதும் பெயின்ட் பூசப்பட்ட நிலையில் காணப்படுவதை காண்பிக்கும் படங்கள்வெளியாகியுள்ளன.
அவரை வெறுங்காலுடன்  இழுத்துச்சென்றார்கள் பின்னர் காவல்துறையினர் அவரைமீட்டனர்என அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்திற்கு ஜனாதிபதி இவா மோரலெஸ் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார். மேயர் தனது கொள்கைகளையும் வறியவர்களின்  நலன்களையும் பாதுகாத்தமைக்காக ஈவிரக்கமற்ற முறையில்  நடத்தப்பட்டுள்ளார். என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

தேர்தல் முடிவுகள் வெளியாவது ஒத்திவைக்கப்பட்டதை தொடர்ந்து ஜனாதிபதி இவா  மொரெலெஸ் மோசடியில் ஈடுபட்டுள்ளார் என்ற சந்தேகம் எழுந்தது.

இந்நிலையில் இறுதி முடிவுகள் அறிவிக்கப்பட்டன- தற்போதைய ஜனாதிபதி பத்து வீத வாக்குகளால் வெற்றிபெற்றார் என அறிவிக்கப்பட்டது. எனினும் எதிர்கட்சியினர் இதனை ஏற்க மறுத்துவருகின்றனர்.
No comments

Powered by Blogger.