தோட்டாக்கள்-கஞ்சாவுடன் சிப்பாய் கைது

ஹற்றன் பூண்டுலோயா பகுதியில் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையில் சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடமிருந்து, ரி – 56 ரக துப்பாக்கியின் தோட்டாக்கள், வெற்றுத் தோட்டாக்கள், மற்றும் ஏனைய துப்பாக்கிகளின் தோட்டாக்கள், கஞ்சா என்பன சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ரி.-56 ரக தோட்டாக்கள் 31, மேலும் வெற்றுத் தோட்டாக்கள் 8, கஞ்சா 13 கிராம் என்பன இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன.

பூண்டுலோயா கரஹாஹெடதென்ன பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் இராணுவச் சிப்பாய் எனவும்,  ஆறு வருடங்களுக்கு முன்பு கடமையிலிருந்து வெளியேறியுள்ளார் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். 

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
No comments

Powered by Blogger.