மின்சார சபை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு

பொலிஸாரின் அசமந்தப் போக்கைக் கண்டித்து வவுனியாவில்  மின்சார சபை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இப்போராட்டம் வவுனியா பூங்கா வீதியிலுள்ள மின்சார சபை தலைமை அலுவலகத்திற்கு முன்பாக இன்று முன்னெடுக்கப்பட்டது.

ஆச்சிபுரம் பகுதிக்கு தொழில் நிமிர்த்தம் சென்ற மின்சார சபை ஊழியர்கள் மீது  நேற்று நடத்தப்பட்ட தாக்குதலில் சபை ஊழியர்கள் அறுவர் படுகாயடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். தாக்குதலுக்குத் தலைமை வகித்தவர் உட்பட இன்னும் பலர் கைது செய்யப்படவில்லை.

இதையடுத்தே வவுனியா மின்சார சபை ஊழியர்கள்  பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டு வருகின்றனர்.

மின்சார சபை தலைமை அலுவலகத்தில் ஒன்றுகூடிய மின்சார சபை ஊழியர்கள் தமது ஊழியர்கள் தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புபட்டுள்ள முக்கிய போதை பொருள் வியாபாரி உடனடியாக கைது செய்யப்படவேண்டும். 

பொலிஸாரின் பாதுகாப்புடன் இருந்துவரும் தாக்குதல் குழுவை உடனடியாகக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தவேண்டும் அதுவரையில் தமது போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாகவும் தமது கடமையைச் சுதந்திரமாக மேற்கொள்வதற்கு பாதுகாப்பு வேண்டும். 

அதுவரை அவசர தேவைகள் உட்பட அனைத்துப் பணிகளும் இடை நிறுத்தப்பட்டுள்ளன. இன்று நண்பகல் 12 மணிக்குள் தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் மன்னார், கிளிநொச்சி பகுதிகளிலுள்ள மின்சார சபை ஊழியர்களும் தமக்கு ஆதரவான போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும்  போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.


No comments

Powered by Blogger.