வறுமையை ஒழிக்க கோத்தபாய திட்டம்

எங்கள் நாட்டில் வறுமை கோட்டின் கீழ் பலர் வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர். அவர்களை அதிலிருந்து விடுவிக்கும் நோக்குடன் பொருளாதார திட்டம் வகுக்கப்பட்டுள்ளது - இவ்வாறு தெரிவித்துள்ளார் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச.

கறந்தேனிய பகுதியில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் தெரிவித்ததாவது,

விவசாயத் தொழில் துறை சார்ந்த அனைத்து உபகரணம் மீதான வரிச்சுமைகளும் நீக்கப்டும்.

கறுவா தொழில் துறையோ அதனை இலகுபடுத்தும் நோக்கில் அதற்கான உபகரணங்கள் மீதான வரிச்சுமையை நீக்கவுள்ளோம்.

எங்கள் நாட்டில் வறுமை கோட்டின் கீழ் பலர் வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர். அவர்களை அதிலிருந்து விடுவிக்கும் நோக்குடன் பொருளாதார திட்டம் வகுக்கப்பட்டுள்ளது-என்றார்.


No comments

Powered by Blogger.