கேப்டனுக்கு நயன்தாரா கொடுத்த பரிசு

தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வெற்றிநடை போடும் திரைப்படம் பிகில். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் பெண்கள் தன்னம்பிக்கையாய் வாழவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த திரைப்படத்தில் மகளிர் கால்பந்து அணியின் தலைவியாக அமிர்தா அய்யர் நடித்துள்ளார். இவரின் பிறந்தநாள் அண்மையில் கொண்டாடப்பட்ட நிலையில் இத்திரைப்பட கிரோயின் நயன்தாரா கடிகாரம் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார்.

அதனை கையில் கட்டியவாறு அமிர்தா ஒளிப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த ஒளிப்படம் தற்போது வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


No comments

Powered by Blogger.