கழிவு நீரிலுமா..?? வியப்பூட்டும் காணொளி!!!!

கழிவு நீர் கால்வாயில் கூட தண்ணீர் தூய்மையாக உள்ளதால் அதில் வண்ண மீன்கள் நீந்தும் வீடியோ ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வியப்புமிக்க சம்பவம் ஜப்பான் நாட்டில் இடம்பெற்றுள்ளது.

உலகில் நாகரீகம் வேகமாக வளர்ந்து வரும்  நிலையில் இயற்கையும் அழிந்து வருகிறது. இயற்கை பேரழிவுகளை குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாமையால் நீர், நிலம், காற்று ஆகியவை மாசடைந்து கொண்டே வருகின்றன.  

பிளாஸ்டிக், மருத்துவக் கழிவுகள் மற்றும் இதர கழிவுகள் கடலில் கொட்டப்படுவதாலும் இரசாயனக் கழிவுகள் கலப்பதாலும் கடல் நீர் மாசுபட்டு பவளப்பாறைகள், மீன் இனங்கள் அழிந்து வருகின்றன. மாசடைந்த நதிகளையும், நீர்நிலைகளையும் சுத்தம் செய்ய ஜப்பான் அரசு முயற்சித்து வருகிறது. 

நீர் நிலைகளை சுத்தமாக வைத்துக்கொள்வதில் ஜப்பான் நாடு முன்னிலை வகிக்கிறது. ஜப்பானில் உள்ள கழிவுநீர் கால்வாய்கள் மிகவும் சுத்தமாகவுள்ளன.

சில நீர்வாழ் உயிரினங்கள் வாழ்வதற்கு கழிவுநீர் கால்வாய்கள் ஏற்றதாகவும் உள்ளது. அதில் அழகான கோய் வகை மீன்கள் நீந்துகின்றன.


 

கழிவுநீர் மேலாண்மையை அந்நாட்டு அரசு சிறப்பாக செயல்படுத்துகிறது. அங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கால்வாய்கள் தூய்மையாக உள்ளதையும் அவற்றில் வண்ண மீன்கள் நீந்துவதையும் வியப்பாகப் பார்த்துச் செல்கின்றனர். 

ஜப்பான் இயற்கையையும் சுற்றுச்சூழலையும் மதிக்கும் நாடு. அது எப்போதும் மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையிலான நல்லிணக்கத்திற்கு முக்கியத்துவம் அளிக்கிறது.  

No comments

Powered by Blogger.