இங்கிலாந்திற்கு பதிலடியடித்த நியுசிலாந்து

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு இருபது போட்டியில் நியூஸிலாந்து அணி 21 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பைத் தெரிவு செய்தது.

இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 176 ஓட்டங்களைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து 177 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, 19.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 155 ஓட்டங்களை பெற்று தோல்வியடைந்துள்ளது.


No comments

Powered by Blogger.