கூட்டமைப்பின் நெடுந்தீவு உறுப்பினர் கோத்தபாயவுக்கு ஆதரவு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினாலும், நல்லாட்சி அரசினாலும் நெடுந்தீவு மக்கள் கடந்த இரு வருடங்களில் ஒரு நன்மையினையும் பெறாத நிலையில் நாம் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாயவை ஆதரிக்கப்போகிறோம்-இவ்வாறு தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நெடுந்தீவு பிரதேசபை தவிசாளர் பி.றொஷான் தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று காலை ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்துக் கூறும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்ததாவது,

இரு ஆண்டுகளுக்கும் மேலாக நெடுந்தீவு பிரதேசசபைத் தவிசாளராக இருக்கிறேன். இந்த காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடமிருந்தோ, இந்த நல்லாட்சியிடமிருந்தோ, எந்தவொரு நன்மைகளும் கிடைக்கவில்லை. 

9 கிலோ மீற்றா் நீளமான பிரதான வீதி பல வருடங்களாக புனரமைக்கப்படாமலிருக்கின்றது. துறைமுகம் பல வருடங்களாக புனரமைப்புச் செய்யப்படாமலிருக்கின்றது.  ஒரு அபிவிருத்தி கூட மக்களுக்குக் கிடைக்கவில்லை. 

இவ்வாறான ஏமாற்றங்களினாலேயே கோத்தபாயவை ஆதாிக்கும் தீா்மானத்தை எடுத்துள்ளோம். பொதுவாகவே மக்கள் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீதும், நல்லாட்சி அரசின் மீதும் நம்பிக்கை இழந்திருக்கும் நிலையில், ஜனாதிபதி வேட்பாளா் கோத்தபாயவை ஆதாிக்கும் தீா்மானத்தை எடுத்திருக்கின்றோம். 

போா் நிறைவடைந்து இரு ஆண்டுகளில் கிளிநொச்சி நகரை கட்டியெழுப்பிய ஜனாதிபதி வேட்பாளா் கோத்தபாய ராஜபக்ச நெடுந்தீவையும் கட்டியெழுப்புவாா். 

முன்னாள் போராளியான என்னையும் என்னைபோன்ற போராளிகளையும் விடுதலை செய்ததைபோல்  தமிழ் மக்கள் மீது அக்கறையுடன் செயற்படுவாா் என நம்புகிறேன். அந்த அடிப்படையிலேயே கோட்டாவை ஆதாிக்க தீா்மானித்துள்ளோம்-என்றாா். 


No comments

Powered by Blogger.