அதிகமாகப் பரவும் கண் நோய்

நாட்டின் பல்வேறு இடங்களிலும் பரவலாக கண் நோயின் தாக்கம் காணப்படுவதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பொதுமக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும். என தேசிய கண் வைத்தியசாலையின் வைத்தியர் பிரசாத் கொலம்பகே அறிவுறுத்தியுள்ளார்.

இதேநேரம்,  மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள பகுதிகளில் நடமாடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கண் சிவப்பு நிறமாகுதல், கண்ணில் வலி ஏற்படுதல் மற்றும் கண்ணீர் வருதல் முதலான நிலைமைகள் இந்த கண்நோயின் தன்மைகளாகும் என கூறப்படுகிறது.


No comments

Powered by Blogger.