இராணுவம் உயிரிழப்பு ; பொறுப்பேற்றது ஐ.எஸ் அமைப்பு

இராணுவச் சோதனைச் சாவடிமீது பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர்.

மாலி நாட்டின் மேனகா பிராந்தியத்தில், இன்தெலிமான் என்ற இடத்தில் ராணுவ சாவடியில் கடந்த முதலாம் திகதி பயங்கரவாதிகள் புகுந்து துப்பாக்கியால் சுட்டும், குண்டுகளை வெடித்தும் தாக்குதல் நடத்தினர்.

இந்தத் தாக்குதலில் 49 ராணுவத்தினர் உயிரிழந்ததாக  உறுதி செய்யப்பட்டுள்ளது. இத் தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. 

இது தொடர்பாக சமூக ஊடகங்களில் வெளியான ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் அறிக்கையில், “மாலியில் இன்தெலிமானில் ராணுவச் சாவடியில் நமது போராளிகள் தாக்குதல்கள் நடத்தியுள்ளனர்” எனக் கூறப்பட்டுள்ளது.

தாக்குதலில் பிரான்ஸ் வீரர் ஒருவரும் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பாக மாலி அரசுடன் பேச்சு வார்த்தை நடத்துவதற்காக பிரான்ஸ் ஆயுதப்படைகள் துறை மந்திரி புளோரன்ஸ் பார்லி, மாலிக்கு செல்லவுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.


No comments

Powered by Blogger.