யானைகளின் அட்டகாசம் ; சொத்துக்கள் சேதம்

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பள்ளிமடு மக்குலானை பகுதியில் யானைகளின் அட்டகாசத்தினால் கட்டடங்கள் மற்றும் மரங்கள் என்பன சேதமாகியுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த சம்பவம் இரவு இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் ஆறு யானைகள் சுற்றுவேலியை துவம்சம் செய்து கோழி வளர்க்கும் கட்டட கூரையினை தேசப்படுத்தியுள்ளது.

அத்துடன் பத்துக்கு மேற்பட்ட வாழை மரங்கள், ஐந்துக்கு மேற்பட்ட தென்னை மரங்கள், பல கற்றாளைகள் உட்பட்டவற்றை சேதப்படுத்தியுள்ளதுடன், தண்ணீர் குழாய்களையும் உடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பிரதேசங்களை அண்டிய பகுதியில் தற்போது வேளாண்மை செய்கை இடம்பெற்று வரும் நிலையில் யானைகளின் நடமாட்டம் தொடர்ந்த வண்ணம் காணப்படுவதாகவும், இரவில் விழித்திருந்து காவல் கடமையில் ஈடுபட்டு வருதாகவும் பிரதேசமக்கள் தெரிவிக்கின்றனர்.

யானைகளின் வருகை தொடர்ந்த வண்ணம் இடம்பெறுமாக இருந்தால் வேளாண்மை மற்றும் தோட்டப் பயிர்கள் என்பவற்றை அழித்து விடக் கூடிய சாத்தியக் கூறுகள் காணப்படுவதாகவும் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.No comments

Powered by Blogger.