மீண்டுமொரு துயரம் ஆழ்துளை கிணற்றில் வீழ்ந்த மற்றுமொரு சிறுமி

சுர்ஜித்தின் துயரம் அடங்குவதற்றுள் மற்றுமொரு 5 வயது சிறுமி அரியானா மாநிலத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்துள்ளார்.

அரியானா மாநிலம் கர்னால் மாவட்டம் ஹர்சிங் புரா கிராமத்தில் நேற்று மாலை தன் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த குறித்த சிறுமி, அங்கு திறந்த நிலையில் இருந்த ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்துள்ளார்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் மற்றும் தீயணைப்பு படையினர்  சிறுமியை மீட்கும் பணியை ஆரம்பித்துள்ளனர்.

50 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றின் அருகே பொக்லைன் எந்திரம் மூலம் பெரும் பள்ளம் தோண்டப்பட்டு வருகிறது. ஆழ்துளை கிணற்றில் சிறுமி இருக்கும் ஆழம் வரை பள்ளம் தோண்டியதும்,  பக்கவாட்டில் சுரங்கம் தோண்டி, சிறுமியை மீட்பதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


No comments

Powered by Blogger.