வில்லனாகும் பரத்

பிரபுதேவா அடுத்ததாக இயக்கி வரும் கிந்தி படத்தில், நடிகர் பரத் பிரபல பாலிவுட் நடிகருக்கு வில்லனாக நடித்து வருகிறார்.

ஷங்கர் இயக்கிய ‘பாய்ஸ்’ படம் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் பரத்.  இதையடுத்து 555  படங்களில் நடித்து கவனம் பெற்றார். 

இருப்பினும் சமீப காலமாக அவர் நடிப்பில் வெளியான படங்கள் எதுவும் சரிவர ஓடாததால், பட வாய்ப்புகள் குறைய தொடங்கின. தற்போது காளிதாஸ் என்ற தமிழ் படமும், 6 ஹவர்ஸ் என்ற மலையாள படமும் பரத் கைவசம் உள்ளன.

இந்நிலையில், பரத் ராதே எனும் கிந்தி படத்தில் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். பிரபுதேவா இயக்கும் இந்த படத்தில் சல்மான் கான் ஹீரோவாக நடித்து வருகிறார். 

ராதே படத்தில் நடிப்பது மூலம் சல்மான் கானுடன் நடிக்க வேண்டும் .என்ற தனது நீண்ட நாள் கனவு நனவாகியிருப்பதாக பதிவிட்டு, சல்மான் மற்றும் பிரபுதேவாவுடன் ஷூட்டிங்கில் எடுத்த புகைப்படத்தையும் டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

2020 ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ராதே திரைப்படம் திரைக்கு வரவுள்ளது. இதன் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. 

No comments

Powered by Blogger.