மலையகத்தில் கோத்தபாயவின் பிரசாரக் கூட்டம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் பிரசாரக் கூட்டம் கொட்டகலையில் நடைபெற்றது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஏற்பாட்டில் கொட்டகலை பிரதேச சபை மைதானத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இந்த கூட்டம் இடம்பெற்றது.

இந்த கூட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபாய ராஜபக்ஷ, எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, நாடாளுமன்ற உறுப்பினர்களான ஆறுமுகம் தொண்டமான், எஸ்.பி.திஸாநாயக்க, சீ.பீ.ரத்நாயக்க, உதய கம்மன்பில, தினேஷ் குணவர்தன, மஹிந்தானந்த அளுத்கமகே ஆகியோர் கலந்துகொண்டனர்.

அத்துடன், மத்திய மாகாண சபை முன்னாள் அமைச்சர் எம்.ரமேஷ்வரன் மற்றும் உறுப்பினர்கள் உட்பட நகர சபை, பிரதேச சபை உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
No comments

Powered by Blogger.