தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் மகிந்த ராஜபக்ச பங்கேற்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்று காலை இடம்பெற்ற பொதுஜன பெரமுனவினுடைய மாபெரும் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில்  மகிந்த ராஜபக்ச அவர்கள் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் உரையாற்றினார்

எதிர்வரும் 16ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான பொதுஜன பெரமுனவினுடைய  மாபெரும் தேர்தல் பரப்புரைக் கூட்டம்   இன்று காலை முல்லைத்தீவு நகர பொது மைதானத்தில் இடம்பெற்றது

முல்லைத்தீவு மாவட்ட பொதுஜன பெரமுன கட்சியின்  முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளர் அன்ரனி ரங்க துசார தலைமையில்  இடம்பெற்ற இந்த மாபெரும் தேர்தல் பரப்புரைக்  மஹிந்த ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினர்  காதர் மஸ்தான் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் கனகரத்தினம்,  பிரபா கணேசன், ப உதயராசா ,வரதராஜபெருமாள் முன்னாள் வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே , திஸ்ஸ விதாரண முன்னாள் கிளிநொச்சி முல்லைதீவு சிவில் பாதுகாப்பு திணைக்கள பொறுப்பதிகாரி கேணல்  ரத்னபிரிய பந்து,முன்னாள் போராளி வள்ளுவன் மாஸ்டர்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கருத்துரைகளை வழங்கினர்.

No comments

Powered by Blogger.