வானில் நிகழப்போகும் அதிசயம்

சூரியனை புதன் கிரகம்  கடந்து செல்லும் அரிதான வானியல் நிகழ்வு இன்று நிகழவுள்ளது.

இந்த அரிய நிகழ்வு ஒரு நூற்றாண்டில் 13 முறை மட்டுமே நிகழ்வதாகக் கூறப்படுகிறது.

புதன் கிரகம் சூரியனை, கடந்து செல்லும் போது, புதனின் விட்டம் சூரியனை விடச் சிறிதாக இருப்பதால் இந்த நிகழ்வு கரும்புள்ளியாக மட்டுமே காட்சியளிக்கும்.

இதை வெற்றுக் கண்ணில் பார்க்கக் கூடாது என்றும் தொலைநோக்கி மூலம் மட்டுமே பார்க்க வேண்டும் என்றும் வானியல் அறிஞர்கள் தெரிவித்துள்ளனர். 

இந்தியாவில் கடந்த 1999, 2003, 2006, 2016 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த அரிய நிகழ்வை இன்று காணலாம். 

அடுத்த நிகழ்வு வரும் 2032 ஆம் ஆண்டு நவம்பர் 13 ஆம் திகதிதான் மீண்டும் நிகழும் என்றும் வானியல் அறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.


No comments

Powered by Blogger.